பிரித்தானிய மற்றும் அமெரிக்க தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்றுமுன்தினம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் குறித்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க, பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான் கீன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதர் வில்லியம் வெனிஸ்டியன் அகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இரு நாடுகளினதும் இராஜதந்திரிகளுடன் தனித்தனியாக இந்தச் சந்தித்து நடத்தப்பட்டுள்ளது. இதன் போது போர்க்குற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான உத்தேச தீர்மானம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது
http://onlineuthayan.com/News_More.php?id=404582731513515343
Posted on Thursday, March 13th, 2014 at 3:44 am